ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 16 டிசம்பர் 2017 (16:29 IST)

புதிய ஆங்கில வார்த்தையை கண்டுபிடித்த 6 வயது சிறுவன்

ஒரு வார்த்தையில் உள்ள எழுத்துக்களை அப்படியே திருப்பி போட்டால் அர்த்தம் வரக்கூடிய சொற்கள் தமிழில் அதிகம் உள்ளது. உதாரணமாக விகடகவி, தாத்தா, பாப்பா, வினவி, மேளதாளமே, கற்க, மாமா, காக்கா, கைரேகை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இதற்கு தமிழில் இருவழியொக்கும் என்ற பெயர் உண்டு
 
இவ்வாறு திருப்பி போட்டாலும் அதே வார்த்தை வராவிட்டாலும் அர்த்தம் தரும் வேறு வார்த்தைகளாக வரும் வகையில் ஆங்கிலத்தில் ஒருசில வார்த்தைகள் உள்ளது. உதாரணமாக stop என்ற வார்த்தையை திருப்பி போட்டால் அது pots என்று வரும். இவ்வாறு திருப்பி போட்டாலும் அர்த்தம் தரும் வார்த்தைகளுக்கு இதுவரை ஆங்கிலத்தில் பெயர் இல்லை. 
 
இந்த நிலையில் இப்படியான வார்த்தைகளுக்கு லெவிடிரோம்’ (levidrome) என்ற வார்த்தையை பயன்படுத்தலாம் என்று கனடாவை சேர்ந்த ஆறுவயது சிறுவன் லெவிபட் என்பவர் கண்டுபிடித்துள்ளார். இந்த வார்த்தையை மெர்ரியம்- வெப்ஸ்டர் ஆங்கில அகராதி அங்கீகரித்து கொண்டாலும், பொதுமக்கள் இந்த வார்த்தையை ஏற்றுக்கொண்டு சில காலம் பயன்படுத்தினால் மட்டுமே ஏற்றுக்கொள்வதாக ஆக்ஸ்போர்டு தெரிவித்துள்ளது.