புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 16 அக்டோபர் 2019 (21:10 IST)

அறிவியல்ரீதியிலான உலக அழகி: பிரபல மாடல் அழகி தேர்வு

இதுவரை உலக அழகிகள் தேர்வு செய்யப்படுவது அவர்களது அழகு மற்றும் அறிவை வைத்து தான் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அறிவியல் ரீதியில் உலக அழகி ஒருவர் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 
விஞ்ஞான ரீதியிலான உலக அழகி யார்? என்பதை கண்டறியும் போட்டி ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. பழங்கால கிரேக்கர்கள் பயன்படுத்திய ஒரு சில விதிமுறைகளை பயன்படுத்தி இந்த அறிவியல்ரீதியிலான உலக அழகி தேர்வு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த போட்டியில் பிரபல மாடல் அழகி பெல்லா ஹேடிட் என்ற 23 வயது அழகியை தேர்வு செய்தனர். கிரேக விதியின் அடிப்படையில் பெல்லா ஹேடிட் 94% மதிபெண்களை பெற்று உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் இரண்டாம் இடத்தில் பிரபல பாப் பாடகி பியான்சேவும், மூன்றாவது இடத்தை அமெரிக்க நடிகை ஆம்பெர் ஹெர்ட்டும் பெற்றனர்.
 
லண்டனை சேர்ந்த மிகப் பிரபலமான முக ஒப்பனை அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு ஒன்று பல்வேறு சோதனைகளுக்கு பின்னர் இந்த அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது