வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2019 (13:39 IST)

நாம் நிலவுக்கு போகிறோம்.. இந்த முறை தங்குவதற்காக! – நாசாவின் புதிய திட்டம்

நிலவில் மனிதன் தங்க வேண்டும் என்ற நெடுநாள் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் புதிய திட்டம் ஒன்றை நாசா தொடங்கியுள்ளது.

1969ல் மனிதன் நிலவில் காலடி வைத்தது பெரும் அதிசயமாக பார்க்கப்பட்டது. அதற்கு பிறகு ஒரு சில முயற்சிகள் தோல்வியடைந்ததால் நாசா நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்பும் முயற்சியை ஒத்தி வைத்தது. நாசா நிலவுக்கு மனிதனை அனுப்பவே இல்லை என்ற சில கோட்பாடுகளும் உண்டு.

இந்நிலையில் தொடர்ந்து பல நாடுகளும் நிலவிற்கு தங்கள் விண்கலங்களை அனுப்பி ஆராய்ச்சி செய்து வருகின்றன. தற்போது மீண்டும் நிலவுக்கு மனிதனை அனுப்ப நாசா தயாராகி வருகிறது. இந்த முறை நிலவிற்கு சென்று உடனே திரும்பாமல் அங்கே தங்கி சோதனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் நிலவில் மனிதன் தங்குவதற்கு ஏற்ற கலன்களை அமைக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். விண்வெளி வீரர்கள் தங்குவதற்கு ஏற்றவாறு அந்த கலன் வடிவமைக்கப்படும் என தெரிகிறது. இதுகுறித்து நாசா ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் “நாம் நிலவுக்கு செல்வோம்.. இந்த முறை தங்குவதற்காக” என்று குறிப்பிட்டு விண்வெளிவீரர்களின் வீடியோ தொகுப்பின் லிங்க்கையும் அளித்துள்ளார்கள்.