திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 7 ஜூன் 2018 (21:47 IST)

அந்தரத்தில் பறந்து வந்த பெண்ணின் ஆடை: சவுதி அரேபியாவில் பரபரப்பு

சவுதி அரேபியா நாட்டில்  பட்டத்து இளவரசராக முகம்மது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர் பெண்களுக்கு பல்வேறு உரிமைகள் தரப்பட்டது. குறிப்பாக பெண்கள் கார் ஓட்டுவது மற்றும் மைதானத்திற்கு சென்று விளையாட்டுக்களை பார்ப்பது ஆகியவைகளுக்கு பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் பெண்கள் மாடலிங் செய்ய இன்னும் அந்நாட்டு அரசு அனுமதிக்கவில்லை
 
இந்த நிலையில் பெண்களின் ஆடைகள் குறித்த ஃபேஷன் ஷோ ஒன்றில் ஆடைகளை ட்ரோன் மூலம் அந்தரத்தில் பறக்க வைக்க ஃபேஷன் ஷோ ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்தனர். அதன்படி அந்தரத்தில் பறந்து வந்த புத்தம் ஆடைகளை ஃபேஷன் ஷோவுக்கு வந்தவர்கள் ரசித்து பார்த்தனர். இதுகுறித்த வீடியோ ஒன்றும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
ஆண்களுக்கு நிகராக பல்வேறு சலுகைகள் வழங்கி வரும் சவுதி அரேபியா இளவரசர் விரைவில் பெண்கள் ஃபேஷன் ஷோவிலும் கலந்து கொள்ள அனுமதி வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.