1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 19 ஏப்ரல் 2018 (11:19 IST)

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?

சவுதி அரேபியாவில் புதிய இளவர்சர் பதவியேற்ற பின்னர் கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. அவற்றில் ஒன்று திரையரங்குகளை மீண்டும் திறக்கலாம் என்பதுதான்
 
கடந்த 1980ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் திரையரங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன்பின்னர் நேற்றுதான் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டது, சவுதி அரேபியா இளவரசர் முதல் திரையரங்கை தொடங்கி வைத்தார். இந்த திரையரங்கில் மன்னர் குடும்பத்தினர் படம் பார்த்தனர்
 
38 ஆண்டுகளுக்கு பின்னர் தொடங்கப்பட்ட இந்த திரையரங்கில் நேற்று ஹாலிவுட் படமான 'பிளாக் பந்தர்' திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த படத்தை மன்னர் குடும்பத்தினர் ரசித்து பார்த்தனர். மேலும் சவுதியின் பல இடங்களில் நேற்று முதல் திரையரங்குகள் இயங்கியது. இந்த திரையரங்குகளில் ஆயிரக்கணக்கானோர் படம் பார்த்தனர்.
 
திரையரங்குகளுக்கு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் புதியதாக 30 முதல் 40 திரையரங்குகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது