வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 ஜனவரி 2018 (11:47 IST)

9 மணி நேரம்; 1500 தொழிலாளர்கள்: சீனாவில் உருவான நான்லாங் ரயில்வே

சீனாவில் மூன்று முக்கிய ரயில் பாதையை இணைக்கும் புதிய நான்லாங் ரயில்வே பாதையை 1500 தொழிலாளர்கள் 9 மணி நேரத்தில் உருவாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 
சீனாவில் வளர்ந்து வரும் நாடுகளில் முக்கிய நாடாக இருந்து வருகிறது. கேன்லாங், கன்ருயில்லாங் மற்றும் ஜான்ங்லா ஆகிய ரயில் பாதைகளை இணைக்கும் நான்லாங் ரயில் நிலையத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி 9 மணி நேரத்தில் முடிந்துள்ளது. இதை அமைக்க 1500 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். 
 
ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி மட்டுமல்லாமல் டிராஃபிக் சிங்னல் உள்ளிட்ட பல வேலைகளும் 9 மணி நேரத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் உலக நாடுகளை வியப்படைய வைத்துள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
 
1500 தொழிலாளர்கள் ஏழு குழுவாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு பணி வழங்கப்பட்டது. அனைத்து பணிகளும் ஒரே நேரத்தில் நடந்தது. இதன்மூலம் இந்த பணி 9 மணி நேரத்தில் முடிந்தது என்று கூறியுள்ளார்.