புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 13 மார்ச் 2022 (08:50 IST)

ரஷ்யா மீது பொருளதாரத் தடை; அணு சக்தி ஒப்பந்தத்தில் சிக்கல்!

ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளதால் புதிய அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ரஷ்யா முரண்டு பிடித்து வருகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ளதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. இந்நிலையில் உலக நாடுகள் மேற்கொண்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் ரஷ்யா கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு இடையே 2015ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாக 2018ல் அமெரிக்கா வெளியேறியது. அதை தொடர்ந்து தற்போது புதுப்பிக்கப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் இதுகுறித்த ஐ.நா உறுப்பு நாடுகள் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இந்த புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை திரும்ப பெற வேண்டும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. இதனால் புதிய அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.