1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 12 அக்டோபர் 2021 (09:49 IST)

வாழை மரத்தில் இருந்து கீழே விழுந்தவருக்கு ரூ.4 கோடி இழப்பீடு!

வாழை மரத்தில் இருந்து கீழே விழுந்தவருக்கு ரூ.4 கோடி இழப்பீடு!
வாழை மரத்திலிருந்து கீழே விழுந்த ஒருவருக்கு இழப்பீடாக ரூபாய் நான்கு கோடி கொடுத்துள்ள நிறுவனம் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான வாழைத் தோப்பில் தொழிலாளி ஒருவர் பணி செய்து கொண்டிருக்கும் போது திடீரென வாழை மரத்தில் இருந்து கீழே விழுந்தார். அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அந்த தொழிலாளிக்கு இழப்பீடு வழங்க கோரி ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 
 
கடந்த 2014ஆம் ஆண்டு அந்த தொழிலாளி வாழை மரத்தில் இருந்து கீழே விழுந்த நிலையில் அதற்கு பின்னால் எந்த வேலையும் செய்ய முடியாததால் இழப்பீடு வேண்டும் என்று கோரி வழக்கு பதிவு செய்து இருந்தார்
 
இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது வாழை மரத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி ரூபாய் 4 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை அந்த நிறுவனம் ஏற்றுக் கொண்டு அந்த தொழிலாளிக்கு 4 கோடி இழப்பீட்டை சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.