வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 20 பிப்ரவரி 2023 (14:21 IST)

காரில் பெட்ரோல் நிரப்பும் ரோபோட்.. பின்லாந்தில் புதிய முயற்சி..!

robot petrol
காரில் பெட்ரோல் நிரப்பும் ரோபோட்.. பின்லாந்தில் புதிய முயற்சி..!
பின்லாந்து நாட்டில் காரில் பெட்ரோல் நிரப்பும் ரோபோட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தற்போது உலகில் பல வேலைகளுக்கு மனிதர்களுக்கு பதிலாக ரோபோட் செய்து வருகிறது என்பதும் இதனால் வேலை வாய்ப்பு குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் காரில் பெட்ரோல் உள்பட எரிவாயுவை நிரப்புவதற்காக ரோபோட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வகை ரோபோட் காரில் மிகச் சரியாக எரிபொருளை நிரப்பும் என்றும் கார் உரிமையாளர்கள் காரில் இருந்து இறங்கி வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறப்படுகிறது. 
 
காரின் பதிவு எண் உறுதி செய்யப்பட்ட பிறகு வாகன ஓட்டிக்கு எவ்வளவு டாலருக்கு எரிபொருள் வேண்டுமோ அதை தெரிவித்தால் உடனடியாக டேங்க் மூடியை ரோபோட் திறந்து தாமாகவே எரிபொருளை நிரப்பி விடுவதாகவும் கூறப்படுகிறது இது குறித்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Siva