செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 25 ஜூன் 2019 (17:57 IST)

டி.வி. ஷோவில் ”டிஷ்யும் டிஷ்யும்”: வைரலாகும் வீடியோ

பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், மூத்த அரசியல் கட்சித் தலைவரும், மூத்த பத்திரிக்கையாளரும் கடுமையாக சண்டை போட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

நேற்று பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில், நேரலை விவாத நிகழ்ச்சியில் பாகிஸ்தான் டெஹ்ரீக்-இ-இன்சாஃப் என்ற அரசியல் கட்சியின் மூத்த தலைவர் மஸ்ரூர் அலி சையலும், மூத்த பத்திரிக்கையாளரும் கராச்சியின் பத்திரிக்கையாளர் சங்கத்தின் செயலாளருமான இம்தியாஸ் கான் ஃபரனும் கலந்து கொண்டனர்.

மேலும் அந்த நிகழ்ச்சியில், வேறு முக்கியத் தலைவர்களும் கலந்துகொண்டனர். இந்நிலையில் அலி சையலும், இம்தியாஸூம் கடுமையாக விவாதித்து கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அலி சையல், பத்திரிக்கையாளர் இம்தியாஸை கீழே தள்ளி தாக்க ஆரம்பித்தார். பின்பு இம்தியாஸும் பதில் தாக்குதல் நடத்தினார்.

பின்பு இவர்களுடைய சண்டையை அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்ற நபர்கள் விலக்கி வைத்தனர்.

மூத்த அரசியல் தலைவர் அலி சையலும், மூத்த பத்திரிக்கையாளர் இம்தியாஸும் அடிதடி சண்டையில் ஈடுபட்ட வீடியோவை, பாகிஸ்தான் மூத்த பத்திரிக்கையாளர் நைலா இனாயத் ”இது தான் புதிய பாகிஸ்தானா?” என கேலி செய்து, தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது மூத்த அரசியல் தலைவர் அலி சையலும், மூத்த பத்திரிக்கையாளர் இம்தியாஸும் அடிதடி சண்டையில் ஈடுபட்ட வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.