1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Updated : திங்கள், 24 ஜூன் 2019 (15:47 IST)

கோலிதான் உங்கள் ஆதர்சம் என்றால் ? – பாபர் ஆசாத்துக்கு அக்தர் அறிவுரை !

பாகிஸ்தான் இளம் வீரரான பாபர் ஆசாத்துக்கு பாக். முன்னாள் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணியோடு நேற்று நடந்த போட்டியில் பாக். அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது. இதில் அந்த அணியின் இளம்வீரரான பாபர் ஆசாத் அடித்த 69 ரன்கள் முக்கியப் பங்காற்றின. இவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லிதான் தன்னுடைய ஆதர்சம் எனப் பலமுறைக் கூறியுள்ளார்.

இதையடுத்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அக்தர், பாபர் ஆசத்துக்கு ஒரு வீடியோ மூலம் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். அதில் ‘ உங்களுக்கு வீராட் கோலிதான் நாயகன் என்றால், நீங்கள் அவரைப் போல விளையாட வேண்டும். விராட் கோலி போல சிங்கிள்ஸ் மற்றும் டபுள்ஸ் ஓடக் கற்றுக்கொள்ள வேண்டும். விராட் கோலி உள்ளிட்ட தலைசிறந்த வீரர்கள் 50 ரன்களுக்குப் பிறகு  வேகமாக ரன் குவிப்பார்கள். அதுப்போல அதிகமான ஷாட்களை அடிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.