வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (15:19 IST)

இஸ்ரேலுக்கு வருகிறது சக்திவாய்ந்த “தாட்” ஏவுகணை தடுப்பு அமைப்பு! – அமெரிக்கா ப்ளான் என்ன?

israel -Palestine
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் வலுவடைந்துள்ள நிலையில் இஸ்ரேலுக்கு சக்திவாய்ந்த “தாட்” (THAAD) ஏவுகணை தடுப்பு அமைப்பை அமெரிக்கா வழங்குகிறது.



இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. இதனால் இரு தரப்பிலும் ஏராளமான பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். ஹமாஸ் குழுவிற்கு ஆதரவாக ஈரான், லெபனான், குவைத், சிரியா போன்ற நாடுகள் பேசி வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் ஹமாஸ் குழுவினருக்கு ஈரான் உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவிகள் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆதரவு இல்லாதபோதே ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்கிய ஹமாஸ் இன்னும் மோசமான தாக்குதலில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அமெரிக்க தனது அதிசக்தி வாய்ந்த ”தாட்” எனப்படும் ஏவுகணை செயலிழப்பு அமைப்பை இஸ்ரேலுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் போரின் தீவிரத்தை பொறுத்து தேவையான மேலும் பல ஆயுதங்களை வழங்கவும் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K