வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 18 அக்டோபர் 2023 (14:23 IST)

போர் என்பதே கொடூரமானது!; இஸ்ரேல் போர் குறித்து முதல்வர் ஸ்டாலின்

Stalin
போர் என்பதே கொடூரமானது, அது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும், அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான் என இஸ்ரேல்-பாலஸ்தீன போர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார்,.
 
கடந்த பத்து நாட்களாக காஸா பகுதியில் நிகழும் போர், உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்படுதல் கூடாது என்பதையும் மீறி மருத்துவமனை தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர் மரணம் அடைந்துள்ளார்கள்.
 
மனிதம் மரத்துப் போய்விட்டதா? உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது, ஐக்கிய நாடுகள் அவையும், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இக்கொடும் போரை நிறுத்த வேண்டும், அப்பாவி பொதுமக்களின் உயிர்களைக் காக்க வேண்டும்" என இஸ்ரேல்-பாலஸ்தீன போர் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran