ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2020 (16:24 IST)

ஜார்ஜ் பிளாய்ட்டை கொலை செய்த காவலருக்கு ஜாமீன் – அமெரிக்க நீதிமன்றம் அதிர்ச்சி உத்தரவு!

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு காரணமான காவலர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாட் என்பவரை அமெரிக்க போலீஸ் அதிகாரி ஒருவர் தனது காலால் ஜார்ஜின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவம் காரணமாக அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள கருப்பினத்தவர்கள் போராட்டம் செய்ததால் கொரோனா பரபரப்பையும் மீறி பெரும் பதட்டம் ஏற்பட்டது.  இதையடுத்து கருப்பின மக்களுக்கு ஆதரவாக #BlackLivesMatter என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் பேசப்பட்டது.

இந்நிலையில் பிளாய்ட் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட நான்கு காவலர்களும் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில்  இப்போது பிளாய்டை கொலை செய்த காவலர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். டெரிக் ஸ்யவின் கிட்டத்தட்ட எட்டு நிமிடங்கள் ஃபிலாய்டின் கழுத்தில் முழங்காலால் அழுத்தி நெறித்துக் கொலை செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு இருப்பது அமெரிக்க மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.