ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 7 அக்டோபர் 2020 (11:47 IST)

சுஷாந்த் தற்கொலை வழக்கு… முன்னாள் காதலி ரியாவுக்கு ஜாமீன்!

நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்ரவர்த்திக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது காதலி ரியா கைது செய்யப்பட்டுள்ளார். ரியா சுஷாந்திற்கு போதை பொருட்கள் வழங்கியதாக தொடரப்பட்ட விசாரணையில் மேலும் பல பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குனர்களுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது சம்மந்தமான வழக்கை இப்போது சிபிஐ விசாரித்து வருகிறது. ரியா சக்ரபோர்த்திக்கு அளிக்கப்பட்ட நீதிமன்றக் காவல் இன்றோடு முடியும் நிலையில் மேலும் அவரது காவலை இம்மாதம் 20 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளனர். இந்த நீட்டிப்பு போதைப் பொருள் தடுப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 18 பேரின் நீதிமன்றக்காவலும் வருகின்ற 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சுஷாந்தின் மரணம் தற்கொலைதான் என கண்டுபிடிக்கப்பட்டதால் ரியாவிற்கு ஜாமீன் கேட்டு அவரது வழக்கறிஞர் மும்பை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய அதை ஏற்ற நீதிமன்றம் ரியாவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.