பைபிள் தெரியாத மகனை உயிரோடு புதைத்து கொன்ற பெற்றோர்

bible
Last Updated: புதன், 6 பிப்ரவரி 2019 (13:03 IST)
அமெரிக்காவில் பைபிள் தெரியாத மகனை அவனது பெற்றோர் உயிரோடு புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவின் மன்டோகோக் கவுண்ட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் டியா. இவரது மனைவி டினா. இவர்களுக்கு ஏதன்(7) என்ற மகன் இருந்தான்.
 
இந்நிலையில் மகன் ஏதனை பைபிளில் உள்ள வாசகங்களை தினமும் மனப்பாடம் செய்து ஒப்பிக்குமாறு டியாவும் டினாவும் கொடுமைபடுத்தி வந்துள்ளனர். சிறுவனை தலையில் அடித்தும், அவனுக்கு சூடுவைத்தும் கொடுமைபடுத்தி வந்துள்ளனர்.
 
கொடூரத்தின் உச்சமாய், சிறுவனை ஒரு சவப்பெட்டிக்குள் படுக்கவைத்து அவனை உயிரோடு எரித்தே கொன்றுள்ளனர் அந்த கயவர்கள்.
wife
 
இதையடுத்து போலீஸார் அந்த கொடூரர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஏதனின் வளர்ப்பு பெற்றோர்கள் என தெரியவந்தது. அந்த மனித மிருகங்களுக்கு உச்சகட்ட தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :