ஓபிஎஸ் மகன் போட்டியிட்டால்? தினகரன் எச்சரிக்கை

Last Updated: செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (18:44 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட நேற்று முதல் விருப்பமனுக்களை அதிமுகவினர் பெற்று செல்லும் நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தும் விருப்பமனுவை பெற்றுள்ளார். எனவே அவர் தேனி தொகுதியில் போட்டியிட சீட் கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஓபிஎஸ் மகன் போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்த அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன், ஒரு குடும்பத்தின் கையில் இருந்த அதிமுகவை மீட்க பாடுபட்டேன் என்று கூறும் ஓபிஎஸ், தனது மகனையே போட்டியிட வைப்பதை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கின்றார்கள் என்றும், தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் போட்டியிட்டால் அந்த பகுதி மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று தினகரன் கூறினார்.


dinakaran t.t.v
மேலும் முன்னாள் அமைச்சர் கேபி பழனிச்சாமி தன்னை விமர்சனம் செய்ய தகுதி இல்லாதவர் என்றும், தன்னுடைய பூனைப்படையை எடுபிடியாக இருந்தாவர் என்றும் தினகரன் கூறினார்


இதில் மேலும் படிக்கவும் :