திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 15 டிசம்பர் 2017 (15:53 IST)

அமெரிக்காவின் தலையெழுத்து; ஆபத்தை உணராத டிரம்ப்: கொக்கரிக்கும் வடகொரியா!!

அமெரிக்கா மற்றும் அமெரிக்க இடையே அமைதியின்மையான சூழல் நிலவி வருகிறது. இதனால், உலக நாடுகள் கலக்கத்தில் உள்ளது. இந்நிலையில், வடகொரியா வெளியிட்டுள்ள செய்தி ஒன்று மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. 
 
பல்வேறு எதிர்ப்புகளை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இது ஆபத்தை ஏற்படுத்தும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்தும் இதனை பொருட்படுத்தாமல் வடகொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது.
 
எனவே, வடகொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் மேலும் அதிகரித்தது. வடகொரியாவும் சலிக்காமல் ஏவுகணை சோதனைகளை நடத்தியது. 
 
இந்நிலையில் வடகொரிய அமைச்சரவை சார்பில் வெளியிடப்படும் மிஞ்சு சோசன் பத்திரிகையில் வெளியான செய்தி மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுப்பது போன்ற கருத்து வெளியிடப்பட்டுள்ளது. 
 
வடகொரியாவை மிரட்டும் அமெரிக்காவின் போக்கு தொடர்ந்து நீடிக்காது. ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள அதிபர் டிரம்ப் காத்திருக்கும் ஆபத்தை அறியாமல் இருக்கிறார். வடகொரியா குறித்த அறியாமையால் அதிபர் டிரம்ப் அமெரிக்காவை ஆபத்துக்குள்ளாக்கப் போகிறார். அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் வடகொரியாவை எதுவும் செய்துவிடமுடியாது என்று கூறப்பட்டுள்ளது.
 
ஆனால், சமீபத்தில்தான் வடகொரியாவுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.