1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (05:16 IST)

ஜப்பானை போட்டுத்தள்ள திட்டமா? வடகொரியா ஏவிய ஏவுகணையால் பரபரப்பு

ஜப்பான் மீது வடகொரியா ஏவுகணை வீசி சோதனை செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் ஜப்பான் தனது நாட்டை பாதுகாக்க மேலும் சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிகிறது. அமெரிக்காவை பழிவாங்குவதற்கு முன்பே ஜப்பான் மீது வடகொரியா ஏவுகணையை ஏவ முடிவெடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது



 
 
அமெரிக்கா உள்பட உலகின் அனைத்து நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட சக்தி வாய்ந்து ஹைட்ரஜன் குண்டு சோதனையால், உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.
 
இதனால் பொருளாதார தடை உள்பட பல அதிரடி நடவடிக்கைகளை அமெரிக்காவும், ஐநாவும் வடகொரியா மீது எடுத்துள்ள நிலையில் கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க, அமெரிக்காவே நேரடியாக களம் இறங்கியுள்ளது.
 
இந்நிலையில் தான் வடகொரியாவில் உள்ள சுனான் பகுதியில் இருந்து ஏவுகணை ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை 1,180 கி.மீ தூரம் கடந்து சென்று பசுபிக் கடலில் விழுந்தது. ஜப்பானின் வான் பகுதியில் இந்த ஏவுகணை சென்றதால், உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஜப்பான் பிரதமர் அபே உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள பிரதமர் அபெ, இதுகுறித்து ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.