வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 29 செப்டம்பர் 2022 (22:33 IST)

ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா

ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது  வடகொரியா.

அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட வல்லரசு நாடுகள் எத்தனை முறை எச்சரித்தும் அதை பொருட்படுத்தாமல்  தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது வட கொரியா.

இந்த நிலையில், சமீபத்தில், வடகொரியாவின் அண்டை நாடும் பகைபாராட்டுகின்ற தென்கொரியாவுக்கு, அமெரிக்காவின் விமானம் தாங்கிப் போர் கப்பல் கூட்டு ராணுவப் பயிற்சிக்காக வந்துள்ளது.

இதை விரும்பாத வடகொரியா, தங்கள் நாட்டில்  இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

‘இந்த வாரத்தில் மட்டும் மட்டும் 3 ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.