வாஷிங்டன் நகரை தாக்க வடகொரியா நவீன ஏவுகணை சோதனை!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 3 நவம்பர் 2017 (14:50 IST)
அமெரிக்காவின் வாஷிங்டன் நகர் வரை சென்று தாக்கும் நவீன ஏவுகணை சோதனையில் வடகொரியா மேற்கொள்ளவுள்ளது.

 
 
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. இதனால், போர்ப் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வடகொரிய கிம் ஜாங் உன்னும் வார்த்தை போரில் ஈடுபட்டனர். 
 
இந்நிலையில், தற்போது வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த புதிய ஏவுகணைக்கு கேஎன்- 20 என பெயரிடப்பட்டுள்ளது.
 
இந்த புதிய ஏவுகணை வாஷிங்டன் வரை சென்று தாக்கும் வலிமை உடையது. ஜப்பானுக்கு டிரம்ப் சுற்றுப்பயணம் செல்வதையடுத்தே இந்த புதிய ஏவுகணை சோதனைகளை வடகொரியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :