ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (13:34 IST)

மாதம் ரூ.4 லட்சம் சம்பளத்தில் வேலை.. ஒருவர் கூட விண்ணப்பிக்காத அதிசயம்..!

job
மாதம் ரூபாய் 4 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டும் இன்னும் ஒருவர் கூட அந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யவில்லை என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள எண்ணெய் கிணறு ஒன்றில் வேலை பார்க்க ஆட்கள் தேவை என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. மாதம் ரூபாய் 4 லட்சம் சம்பளம் என்றும் அதுமட்டுமின்றி இரண்டு வருடங்கள் வேலை செய்தால் ஒரு கோடி சம்பளம் என உயர்த்தப்படும் என்றும் கூறப்பட்டது. 
 
கடலில் எண்ணெய் கிணறுகளை தோண்டி அதிலிருந்து எண்ணெய்கள் மற்றும் ரசாயன வாயுக்களை பத்திரமாக கரைக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் அந்த வேலை. 
 
ஆனால் இந்த வேலை ரிஸ்க்கான வேலை என்பதால் இதுவரை ஒருவர் கூட விண்ணப்பம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து இன்னும் சம்பளத்தை அதிகரிக்க எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran