வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (16:57 IST)

வேலை தர தயார், உழைக்க தயாரா? தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வணிகர்சங்க தலைவர் கேள்வி!

vikramaraja
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை தர வணிகர்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம் ஆனால் நீங்கள் உழைக்க தயாரா என வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜா கேள்வி எழுப்பி உள்ளார். 
 
தமிழ்நாட்டில் வேலை இல்லை என்று தாங்களை ஏமாற்றிக் கொள்ளாமல் வேலை வாய்ப்புகளை தேட இளைஞர்கள் முன் வர வேண்டும் என்றும் வேலை தருவதற்கு வணிகர்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் தமிழ்நாடு வணிக சங்க தலைவர் விக்ரம ராஜா தெரிவித்துள்ளார்.
 
இங்குள்ள வட மாநில தொழிலாளிகள் பணியாற்றி மாதம் 18,000 கோடி வருவாயை வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர் என்றும் அதனால் தான் இங்கு வணிகம் மிகவும் பின்தங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
தமிழ்நாடு இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் உழைப்பதற்கு தயாராகுங்கள் நாங்கள் வேலை கொடுக்க தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva