Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எச்1பி விசா நீட்டிப்புக் கொள்கையில் மாற்றமில்லை; அமெரிக்க வாழ் இந்தியர்கள் நிம்மதி

visa
Last Modified புதன், 10 ஜனவரி 2018 (11:52 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் எச்1பி விசா நீட்டிப்புக் கொள்கையால் 5 முதல் 7.5 லட்சம் இந்தியர்கள் வேலையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த சட்டம் தளர்வடைந்ததால் அமெரிக்காவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்தே பல திடுக்கிடும் சட்டங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் அந்நாட்டவரிடம் அமெரிக்க பொருட்களை வாங்குங்கள் என்றும் அமெரிக்கர்களை மட்டுமே பணி அமர்த்துங்கள் என்ற கொள்கையை கடைபிடிக்க வலியுறுத்தி வருகிறார். இந்தியா உள்ளிட்ட பிற உலக நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் தங்கியிருந்து வேலை செய்பவதற்கு ‘எச்-1 பி’ விசா கட்டாயமாகும். இந்த விசாக்களில் 70 சதவீதம் இந்தியர்களுக்கே வழங்கப்படுகிறது.  டிரம்ப் தலைமியிலான அரசு, வேலை வாய்ப்பில் அமெக்கர்களுக்கு முன்னுரிமை வழங்ப்பட வேண்டும் நோக்கில் எச்-1 பி விசா நீட்டிப்பை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தை அமெரிக்க அரசு நிறைவேற்றினால் 5 - 7.5 லட்சம் இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் அபாயத்திற்கு தள்ளப்பட்டனர்.
 
இந்நிலையில் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றத் துறை, எச்1பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற நிர்பந்திக்கும் விதிமுறையை நிராகரித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் மிகவும் நிம்மதி அடைந்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :