Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நேரடி பேச்சுவார்த்தைக்கு தயார்: டிரம்ப்பின் அழைப்பை ஏற்பாரா கிம்??

kin
Last Modified திங்கள், 8 ஜனவரி 2018 (14:05 IST)
வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் உலக நாடுகளை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனால் பல பொருளாதார தடைகள் வடகொரியா மீது விதிக்கப்பட்டது.

இவ்வாறு இருக்கையில், வரும் பிப்ரவரி மாதம் தென்கொரியாவில் விண்டர் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ளது. இதனால், தென்கொரியா வடகொரியாவிடம் பேச விருப்பம் தெரிவித்திருந்தது. இதை வடகொரியா ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெறும் என தெரிகிறது.


இந்த பேச்சுவார்த்தையின் மூலம் கொரிய தீபகற்பத்தில் அமைதிக்கான அறிகுறி தெரிவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இது குறித்து டிரம்ப் கூறியதாவது, எனக்கு எப்போதும் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை உண்டு. கிம்மிடம் தொலைபேசியில் பேசுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அவருடன் நேரடியாக பேசவே விரும்புகிறேன்.
ஒலிம்பிக்கிற்கு அப்பாலும் இரு கொரிய நாடுகள் இந்த ஈடுபாட்டை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். சரியான நேரத்தில், நாங்கள் செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் அமெரிக்க விடுத்த பேச்சுவார்த்தையை வடகொரியா நிராகரித்த நிலையில், இது எந்த அளவிற்கு வெற்றி காணும் என்பது வடகொரிய அதிபர் கிம்மின் முடிவில்தான் உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :