வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வியாழன், 18 ஜூலை 2019 (19:54 IST)

எந்திரன் 2.0 உண்மையாகிறது: பக்ஷிராஜனாக மாறி திரும்பி தாக்கும் அமெரிக்க பறவைகள் - நிஜ சம்பவம்

பறவைகள் கூடு கட்டும் இடங்களை மனிதர்கள் ஆக்கிரமிப்பதால், பறவைகள் மனிதர்களை தாக்கும் சம்பவம் அமெரிக்காவில் சாதாரணமாகிவிட்டதாக கானுயிர் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

தாக்கிய பறவை

டென்வர் நகரின் மத்திய பகுதியில் உள்ள ஏரியில் தன் நாயை நடைப்பயிற்சிக்கு ஒருவர் அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பறவை தாழ்வாக பறந்தது. அவர் என்னவென்று சுதாரிப்பதற்குள்ளேயே, பறவை மேரியின் தலையில் தாக்கிவிட்டு, புதருக்குள் சென்றுவிட்டது.

இதை அவரே டென்வர் போஸ்ட் இணைய இதழில் தெரிவித்துள்ளார்.

இதை நகைச்சுவையான சம்பவம் என்று விவரித்து இருக்கும் அவர், ஆனால் அந்தச் சம்பவம் நடந்த போது தாம் திடுக்கிட்டு விட்டதாக கூறுகிறார்.

அதிகரிக்கும் தாக்குதல்

பறவைகள் பாதுகாப்பு அமைப்பான தேசிய ஆடுபம் அமைப்பின் கலிஃப்போர்னியா பிரிவு இயக்குநர் ஆண்ட்ரியா ஜோன்ஸ், இவ்வாறான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக கூறுகிறார்.

அவர், "இவ்வாறான தாக்குதல் அதிகரிப்பதற்கு காரணம் பறவைகளின் வசிப்பிடத்தை நாம் அக்கிரமிப்பதுதான்" என்கிறார்.

பறவைகள் தம் குஞ்சுகளை வளர்க்கும் காலக்கட்டத்தில்தான் பறவைகள் திரும்பி தாக்குகின்றன. தமது குஞ்சுகளை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தாக்குகின்றன. அந்த சமயத்தில் தன்னைவிட பெரிதாக இருக்கும் பிற விலங்குகளையும், பறவைகள் தாக்கும் என்று அவர் தெரிவிக்கிறார்.

மசெட்சூசெட்ஸ் பகுதியில் உள்ள தீவில் ஜோன்ஸ் பறவைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுப்பட்டிருந்த சமயத்திலும் இவ்வாறான பறவைகள் தாக்குதலுக்கு இவர் உள்ளாகி இருக்கிறார். அந்த சமயத்தில் பிளஸ்டில் மலர்கள் கொண்ட உயரமான தொப்பியை அணிந்து கொள்வாராம். பறவைகள் உயரமான பகுதியை மட்டும் தாக்கும் என்பதுதான் அதற்கு காரணம்.

பறவைகள் தாக்குதலில் இருந்து தப்பிக்க டென்வர் பகுதியில் ஜாக்கிங் செல்பவர்களும் தம் தலைகளுக்கு மேல் கைகளை ஆட்டிக் கொண்டே செல்வார்களாம்.
அமெரிக்காவில் மட்டும் இந்தப் பிரச்சனை இல்லை. அமெரிக்காவுக்கு வெளியிலும் இந்தப் பிரச்சனை உள்ளது.

வேல்ஸ் பகுதியில் ஒருவர் சீ கல் பறவை தாக்குதிலிருந்து தப்பிக்க வழி கேட்ட போது, நகர் மன்ற தலைவர் குடையை பயன்படுத்த சொல்லி இருக்கிறார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காகங்கள் அடிக்கடி தாக்கும். அவ்வாறு தாக்கப்பட்ட ஜிம் என்பவர் க்ரோ ட்ராக்ஸ் எனும் தனி இணையதளத்தையே தொடங்கி இருக்கிறார்.

"காகங்களால் தாக்கப்பட்ட கதை ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. எனது இணையதளத்தில் மட்டும் அவ்வாறாக 5000 செய்திகள் இருக்கின்றன" என்கிறார்.

ஆஸ்திரேலியாவிலும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

பருவநிலை மாற்றம்

பறவைகளின் வெளியை மதிக்க வேண்டும். அதாவது அதன் இருப்பிடத்திற்கான மரியாதையை அளிக்க வேண்டும் என்கிறார் ஜோன்ஸ்.

பறவைகளின் வசிப்பிடம் சுருங்கியதற்கு பருவநிலை மாற்றமும் ஒரு காரணம் என்கிறார் அவர்.

அதீத வெப்பம் அமெரிக்காவில் சதுப்பு நிலங்களில் வறட்சிக்கு காரணமாக அமைந்துவிட்டது. அந்த இடங்களில்தான் பறவைகள் குஞ்சு பொறிக்கும்.