வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 16 நவம்பர் 2020 (07:55 IST)

விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்:

விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்:
நாசாவை சேர்ந்த நான்கு விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்கலம் நேற்று நள்ளிரவு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது 
 
அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் என்ற பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
நான்கு விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு செல்லும் இந்த ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டின் மூலம் புதிய சாதனை ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த ஸ்பேஸ் ராக்கெட்டில் ராக்கெட்டை மைக் பென்ஸ் மற்றும் கரேன் பென்ஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர் மேலும் இந்த விண்கலத்தில் மைக்கேல் ஹாப்கின்ஸ், விக்டர் குளோவர், ஷன்னான் வாக்கர் ஆகிய மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களும் சோய்சி நொகுச்சி என்ற ஜப்பான் வீரரும் பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணிக்கு இந்த ராக்கெட் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணில் சென்று இருக்கும் நான்கு பேர்களும் விண்வெளி மையத்தில் ஆறு மாதங்கள் தங்கியிருந்து ஆய்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது