வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (08:36 IST)

கிராம மக்கள் 30 பேரை கொன்று எரித்த ராணுவம்! – மியான்மரில் தொடரும் கொடூரம்!

மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் பொதுமக்களை ராணுவ வீரர்கள் கொன்று எரித்ததாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மரில் மக்களாட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதை தொடர்ந்து மியான்மரில் ராணுவத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மியான்மரின் கிழக்கு பகுதியில் உள்ள கயா மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. இதனால் அங்குள்ள மோ சோ கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் பாதுகாப்பான இடத்திற்கு தப்பி செல்ல முயன்றபோது பெண்கள், குழந்தைகள் உட்பட 30 பேரை பிடித்த ராணுவம் அவர்களை சுட்டுக் கொன்றதோடு, எரித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இதேபோல 11 பேரை எரித்துக் கொன்றதாக மியான்மர் ராணுவம் மீது உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.