1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (14:00 IST)

ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்த விபத்துப்பகுதி!

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

 
கடந்த 8 ஆம் தேதி குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஆய்வு செய்ய ரஷ்ய ராணுவக் குழு தமிழகம் வர உள்ளது.
 
இந்நிலையில் கடந்த வாரம் ஹெலிகாப்டர் விபத்து நேரிட்ட இடத்தில் இருந்து ஹெலிகாப்டர் பாகங்களை எடுத்துச் செல்லும் பணி தொடங்கியது. விமானப்படையினர் மற்றும் காவல்துறையினர் அங்கு உடைந்து கிடக்கும் ஹெலிகாப்டரின் பாகங்களை சேகரித்து வருகின்றனர். 
 
இதனிடையே குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஹெலிகாப்டரில் பறந்தபடி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விபத்து நடந்த பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.