1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (18:10 IST)

100க்கும் மேற்பட்ட கார்கள் மோதி விபத்து! என்ன காரணம்?

china
சீனாவின் கஜோ நகரில் உள்ள எக்ஸ்பிரஸ் சாலையில் பனிமழை பெய்த சாலையில் பயணித்த 100க்கும் மேற்பட்ட கார்கள் விபத்தில் சிக்கின.
 
சீனாவில்  உள்ள பல பகுதிகளில் சில வாரங்களாகவே கடுமையான குளிர்  நிலவிவருகிறது.
 
இங்கு, பனிப்புயல் மற்றும் பனிமழையும் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
ஆனாலும், இந்த கால நிலையைப் பொருட்படுத்தாமல் வரும் புத்தாண்டை கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர்.
 
இந்த பனிப்புயல் மற்றும் பனிமழையால் பல பகுதியில் விபத்துகள் ஏற்பட்டுள்ளது.
 
குறிப்பாக கஜோ நகரில் உள்ள எக்ஸ்பிரஸ் சாலையில் பனிமழையால் அங்குள்ள சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனர். அதில், பனிபடர்ந்த சாலையில் சென்ற  சில வாகனங்கள் பிரேக் பிடிக்காமல், சறுக்கிச் சென்று விபத்தில் சிக்கின. இதைத்தொடர்ந்து வந்த வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி  சேதமடைந்தன.
 
இப்படி 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கி ஒரே இடத்தில் ஸ்தம்பித்து நின்றதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
 
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு,  போக்குவரத்தை சரி செய்தனர்.