1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (15:30 IST)

ரூ.360 கோடியில் புதிய சாலை: நள்ளிரவில் ஆய்வு செய்த பிரதமர் மோடி!

pm modi, cm yogi adhithyanath
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நேற்று நள்ளிரவில் பிரதமர் மோடி , அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத்துடன்  ரூ.360 கோடியில் கட்டப்பட்டுள்ள  ஷிவ்பூர்- புல்வாரியா  லஹார்தாரா சாலையை ஆய்வு செய்தார்.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைக்கவும், வேறுசில  நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் பிரதமர் மோடி நேற்றிரவு  வாரணாசி வந்தார்.
 
நேற்று நள்ளிரவில் பிரதமர் மோடி , அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத்துடன்  ரூ.360 கோடியில் கட்டப்பட்டுள்ள  ஷிவ்பூர்- புல்வாரியா  லஹார்தாரா சாலையை ஆய்வு செய்தார்.
 
இந்தச் சாலை பணாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருந்து, விமான நிலையம் வரை 45 நிமிடங்களில்( முன்பு 75 நிமிடங்கள்) பயணிக்கலாம்.  இதன் மூலம் போக்குவரத்து நெரிசலும் குறைந்துள்ளது. அதேபோல் லஹார்தாராவில் இருந்து கசாஹ்ரிக்கு 15 நிமிடங்களில்( முன்பு 30  நிமிடங்கள்)  செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், ''காசிக்குச் சென்றதும்  ஷிவ்பூர்- புல்வாரியா- லஹார்தாரா சாலையை ஆய்வு மேற்கொண்டேன். சமீபத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டம்,  நகரின் தெற்குப் பதிதியிலுள்ள மக்களுக்கு உதவும்'' என்று தெரிவித்துள்ளார்.