வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By

உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்த பேஸ்புக் நிறுவனர் மார்க்

சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் உலக பணக்காரர்கள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

 
உலகின் பிரபல சமூக வலைத்தளமாக அறியப்படும் பேஸ்புக் தளத்தின் நிறுவனர் உலக பணக்காரர்கள் பட்டியலில் வாரென் பஃபெட்-ஐ பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். 
 
தற்சமயம் உலக பணக்காரர்கள் பட்டியல் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் உள்ளனர். பங்குச் சந்தையில் பேஸ்புக் நிறுவன பங்குகள் 2.4% வளர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து அதன் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் பணக்காரர்கள் பட்டியலில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்.
 
உலக பணக்காரர்கள் பட்டியலின் முதல் மூன்று இடங்களில் தொழில்நுட்பத் துறையை சேர்ந்தவர்கள் பிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். உலகின் மூன்றாவது பணக்காரர் ஆன மார்க் சூக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு தற்சமயம் 8160 கோடி டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. 
 
எட்டு மாதங்களில் இல்லாத அளவு பேஸ்புக் பங்கு மதிப்பானது மார்ச் 27-ம் தேதி நிலவரப்படி வெகுவாக குறைந்து 152.22 டாலர்களாக இருந்தது. அதன்பின்னர் பங்குகளின் மதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. வெள்ளிக்கிழமையுடன் நிறைவுற்ற பங்குச்சந்தையில் பேஸ்புக் பங்கு மதிப்பு 203.23 டாலர்களாக அதிகரித்துள்ளது.