ஃபேஸ்புக் மூலம் சிறுமியிடம் 20 சவரன் நகை கொள்ளை

Facebook
Last Updated: சனி, 23 ஜூன் 2018 (16:26 IST)
சென்னையில் ஃபேஸ்புக் மூலம் சிறுமியிடம் பழகி 20 சவரன் நகைகளை கொள்ளையடித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 
சென்னை சூளைமேட்டை சேர்ந்த கல்லூரி மாணவர் ஃபேஸ்புக்கில் பள்ளி சிறுமிகளை குறிவைத்து, அவர்களைன் பதிவுகளுக்கு விருப்பம் தெரிவித்து தன்வசப்படுத்தி வருவதை வாடிக்கையாக செய்து வந்துள்ளார்.
 
சென்னை எம்.ஐ.டி காலனியில் அமைந்துள்ள பள்ளியில் படிக்கும் மாணாவி ஒருவர் இந்த இளைஞருக்கு அறிமுகமாகி உள்ளார். நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கி ஊர் சுற்றியுள்ளனர்.
 
ஒருகட்டத்தில் தான் தொழில் தொடங்க லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுவதாகவும், தனக்கு உதவுமாறும் சிறுமியிடம் இளைஞர் கேட்டுள்ளார். இளைஞரின் பேச்சை நம்பி பள்ளி மாணவியும் 20 சவரன் நகைகளை தந்துள்ளார்.
 
இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர்கள் நகை காணவில்லை என வீட்டில் தேடியுள்ளனர். அப்போது நகைகளை தனது நண்பருக்கு கொடுத்துள்ளதாக மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
 
இதையடுத்து மாணவியின் பெற்றோர் அரும்பாக்கம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். மேலும் அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :