வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 5 ஆகஸ்ட் 2017 (14:01 IST)

மாணவியை கொடூரமாக கற்பழித்து கொன்ற காமுகனுக்கு 15 ஆண்டுகள் சிறை!

மாணவியை கொடூரமாக கற்பழித்து கொன்ற காமுகனுக்கு 15 ஆண்டுகள் சிறை!

ஜெர்மனியில் மாணவி ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த வருடம் மே மாதம் நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்துள்ளது நீதிமன்றம்.


 
 
சீனாவை சேர்ந்த லி யங்ஜீ என்ற 25 வயதான பெண் ஒருவர் கிழக்கு ஜெர்மனியின் டெஸ்ஸாவ் பகுதியில் கட்டடக்கலை துறையில் படித்து வந்துள்ளார். இவர் தினமும் காலை ஜாக்கிங் செல்வது வழக்கம்.
 
அப்படி ஒருநாள் ஜாக்கிங் செல்லும் போது அந்த மாணவிக்கு செனியா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பின் காரணமாக அந்த பெண் ஒரு நாள் தனது வீட்டுக்கு அழைத்த போது மாணவி அங்கு சென்றுள்ளார்.
 
மாணவி அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றபோது அவரது கணவர் செபாஸ்டின் அங்கு இருந்துள்ளார். அப்பாது மாணவியுடன் தம்பதிகள் இருவரும் பேசிய உரையாடல் மாணவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவர் தான் விடுதிக்கு செல்கிறேன் என கூறிவிட்டு புறப்பட்டுள்ளார்.
 
அப்போது அந்த பெண் மாணவியை தடுத்துவிட்டு வீட்டை உள்பக்கமாக பூட்டியுள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணின் கணவர் செபாஸ்டின் மாணவி மீது பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார். அவரது மனைவி இதற்கு உதவியாக இருந்துள்ளார்.
 
அவர்கள் இருவரின் பலத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறிய மாணவியை செபாஸ்டின் கொடூரமாக கற்பழித்துள்ளார். இதனையடுத்து மாணவி மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இருவரும் சேர்ந்து மாணவியின் உடலை வெளியே கொண்டு சென்று மறைத்து வைத்தனர்.
 
இந்நிலையில் ஜாக்கிங் சென்ற மாணவி விடுதிக்கு திரும்பாததால் சதேகம் அடைந்த அவரது தோழிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டு நாட்களில் மாணவியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு தம்பதிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
 
கடந்த வருடம் மே மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்தின் வழக்கில் நேற்று தீர்ப்பு வந்துள்ளது. அதில் அந்த தம்பதிகள் மாணவியை கற்பழித்து கொலை செய்தது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது.
 
மாணவியை கற்பழித்து கொலை செய்த குற்றத்திற்காக கணவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதற்கு உதவியாக இருந்த மனைவிக்கு 6 1/2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடாக குற்றவாளிகள் 60000 யூரோ வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.