1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 10 ஜூலை 2021 (08:36 IST)

மோசமான வைரஸ்... லாம்ப்டா குறித்து எச்சரிக்கும் WHO!

சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ள மிக மோசமான கொரோனா வகை வைரஸுகளில் ஒன்று லாம்ப்டா என உலக சுகாதார நிறுவனம் தகவல். 

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக பல கோடி மக்களை தாக்கி வரும் நிலையில் பல்வேறு நாடுகளில் கொரோனா வெவ்வேறு வகையில் மாற்றம் அடைந்துள்ளது. அவற்றை ஆல்பா, பீட்டா, டெல்டா என பெயரிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்தியாவில் உண்டான டெல்டாவின் மாற்றமடைந்த வேரியண்டான டெல்டா ப்ளஸ் உலக நாடுகளால் ஆபத்திற்குரியதாக பார்க்கப்பட்டது.
 
இந்நிலையில் பெருவில் க்ண்டறியப்பட்டுள்ள லாம்ப்டா வேரியண்டானது டெல்டா ப்ளஸை விட வீரியமிக்கது என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வகையானது மிகவும் வீரியமிக்கதாகவும், அதிவேகத்தில் பரவி வருவதாலும் பல்வேறு நாடுகளில் மூன்றாம் அலைக்கு இந்த வகை முக்கிய காரணமாக இருக்கும் என்றும் தெரிகிறது. 
 
தென் அமெரிக்க நாடான பெருவில் முதலில் ஜூன் 14 ஆம் தேதி லாம்ப்டா வகை கண்டறியப்பட்டுள்ளது. மிகக் குறுகிய நாட்களிலேயே கிட்டத்தட்ட 25 நாடுகளில் இந்த வகை பரவி இருப்பது தெரியவந்துள்ளது. சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ள மிக மோசமான கொரோனா வகை வைரஸுகளில் ஒன்று லாம்ப்டா என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.