வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 18 ஜூலை 2018 (20:14 IST)

அதிகாரிகளை வாட்டி வதைக்கும் கிம் ஜாங் உன்: திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன?

பொருளாதார திட்டங்களை நிறைவேற்றுவதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகாரிகளை விமர்சித்துள்ளார் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்.
 
பொதுவாக நாட்டிலுள்ள தொழிற்சாலைகளை பார்வையிடும்போது அங்குள்ள அதிகாரிகளை பாராட்டுவதை கிம் ஜாங் உன் வழக்கமாக கொண்டிருந்தார். 
 
இந்நிலையில், ஒரு மின்னுற்பத்தி நிலையத்தின் கட்டுமான பணி 70 சதவீதமே நிறைவடைந்துள்ளதை கண்டு கிம் பேச்சற்று போனதாகவும், மேலும் ஓட்டல் ஒன்றில் மீன் தொட்டிகளைவிட மோசமான நிலையிலுள்ள குளியல் தொட்டிகளை கண்டு அவர் அதிர்ச்சியடைந்ததாகவும் அந்நாட்டின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு அடுத்து, தனது பொருளாதார வளர்ச்சிக்கு வட கொரியா முன்னுரிமை அளித்து வருகிறது. சீனாவின் எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள வட ஹம்யோங் மாகாணத்திலுள்ள நான்கு இடங்களை இந்த ஆய்வுப்பணியின்போது கிம் ஜாங் உன் பார்வையிட்டார்.
 
குறிப்பாக ஓரஞ்சான் மின்னுற்பத்தி நிலையத்தின் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 17 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இதுவரை 70 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதை அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
அதற்கடுத்து, அங்குள்ள பை தயாரிக்கும் தொழிற்சாலையை பார்வையிட்ட கிம் ஜாங் உன், மாகாண அரசு ஒழுங்கற்ற முறையில் இயங்கி வருவதாக கூறி விமர்சித்துள்ளார். இவ்வாறு அவர் பொருளாத வகையும், மக்களுக்காகவும் யோசிக்க துவங்கியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.