Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

புதைக்கப்பட்ட கண்ணாடி பாட்டிலுக்குள் குழந்தைகள்: ஜப்பானில் அதிர்ச்சி...

Last Updated: செவ்வாய், 13 மார்ச் 2018 (15:43 IST)
ஜப்பானில் வீடு ஒன்றை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது அந்த வீட்டின் தரை பகுதியில் புதைக்கப்பட்ட கண்ணாடி பாட்டிலுக்குள் குழந்தைகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 
ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் கடந்த மூன்று வருடங்களாக யாரும் பயன்படுத்தாத மருத்துவரின் வீடு ஒன்று இருந்துள்ளது. இதனை சமீபத்தில் ஒருவர் வாங்கியுள்ளார்.
 
வாங்கிய வீட்டை புதுப்பிக்கும் பணிகளை வேலை ஆட்களை வைத்து துவங்கினார். அப்போது தரை பகுதியில் புதைக்கப்பட்ட நான்கு கண்ணாடி பாட்டில்கலை கண்டெடுத்துள்ளனர். 
 
அந்த பாட்டிலில் நான்கு குழந்தைகள் தொப்புள் கொடியுடன் இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வேலை ஆட்கள் உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். 
 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், பாட்டில்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சில வேதிப்பொருட்களை பயன்படுத்தி குழந்தையின் உடல்கள் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. 
 
ஆனால், இதை செய்தது யார், அந்த குழந்தைகள் யாருடையது, எதற்காக இவ்வாறு செய்துள்ளனர் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்த தீவிர விசாரணையில் ஜப்பான் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :