Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிரியாவில் சகோதரியின் உயிரை காப்பாற்ற தன் உயிரைக் கொடுத்த தங்கை

child
Last Modified செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (14:17 IST)
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே  சண்டை நடைபெற்று வருகிறது.  
இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 9 நாட்களில் மட்டும் இதுவரை 700  பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
 
இந்தியா முழுவதும் நடிகை ஸ்ரீதேவியின் மரணம்தான் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் அதையும் தாண்டி நெஞ்சை உலுக்கும் ஒரு  சம்பவம் சிரியாவில் நடந்து வருகிறது. என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஓடி விளையாடும் வயதில் ரத்தத்தையும், குண்டு வெடிப்பையும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர் சிரியா நாட்டு குழந்தைகள். ஓட்டுமொத்த சிரியாவும் தற்போது ரத்த பூமியாகவே காட்சியளிக்கிறது. ஒவ்வொரு புகைப்படங்களும்  பார்ப்போர் உள்ளத்தை நொருங்க செய்கிறது.
 
இந்நிலையில் ரசாயன தாக்குதலில் காயமுற்ற தனது தங்கையை, சிறுமி ஒருவர் செயற்கை ஆக்ஸிஜன் கொடுத்து காப்பாற்றியுள்ளார். ஆனால் தங்கையின் உயிரைக் காப்பாற்றிய சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். தன் உயிரைக் கொடுத்து தங்கையின் உயிரைக் காப்பாற்றிய சகோதரியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :