வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 26 அக்டோபர் 2018 (15:42 IST)

சூப்பர் மேனாக மாறி குற்றவாளிகளை பிடித்த நீதிபதி

வாஷிங்டனில் நீதிமன்றத்தில் இருந்து தப்பித்து ஓட முயன்ற குற்றவாளிகளை நீதிபதியே சூப்பர் மேனாக மாறி அதிரடியாக பிடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
வாஷிங்கடனில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த 2 குற்றவாளிகளை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குற்றவாளிகளை விசாரித்த நீதிபதி பசார்ட், அவர்களுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
 
அப்போது யாரும் எதிர்பாராத வண்ணமாய் குற்றவாளிகள் இருவர் கைவிலங்குடன் தப்பித்து சென்றனர். போலீஸாரே சும்மாக நின்றுகொண்டிருக்க அதிரடியாக சூப்பர் மேனாக மாறிய நீதிபதி அந்த குற்றவாளிகளை துரத்தி சென்று பிடித்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி அந்த நீதிபதிக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.