திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 13 மார்ச் 2020 (20:08 IST)

கொரோனா வைரஸ் : ஒரே நாளில் ஈரானில் 85பேர் பலி !

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதிலும் 4720 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 1,28,343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
 
இதுவரை இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 76 லிருந்து  81  பேர் இந்த  வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், ஈரான் நாட்டில் இன்று ஒரே நாளில் மட்டும் 85 பேர் கோரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். எனவே ஈரானில் மொத்தம் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 514 ஆக உயர்ந்துள்ளது.