திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 10 டிசம்பர் 2020 (17:44 IST)

சென்னையில் இந்தியா- இங்கிலாந்து போட்டிகள்...பிசிசிஐ அறிவிப்பு

இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை இழந்தாலும் டி-20 தொடரில் நடராஜன் பந்துவீச்சில் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.

இதையடுத்து, இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின்  முதல் ஆட்டம் வரும் பிப்ரவரி மாதம்-5 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

முதலிரண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும், அடுத்த இரண்டு போட்டிகள் அகமதாபாத்திலும் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளது பிசிசிஐ.

இதனால் கிரிக்கெட் ரசிகர்களும் சென்னை வாசிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.