புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 11 நவம்பர் 2022 (21:06 IST)

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பூங்காக்களுக்குச் செல்ல தடை !- தாலிபான்கள் உத்தரவு

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்ற நிலையில் பழமை விரும்பிகளான தாலிபான்கள் கையில் ஆட்சி போன பிறகு, மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது, பெண்கள் பொழுது போக்குப் பூங்காங்களுக்குச் செல்லக் கூடாது என தாலிபான் கள் உத்தரவிட்டுள்ளனர்.

ஏற்கனவே, பொதுவெளியில் பெண்கள், செல்லக் கூடாது, வேலைகளுக்குச் செல்லக்கூடாது, கல்லூரிகளுக்குச் செல்லும் பெண்கள் மீது தாக்குதல் என பல சர்ச்சைகள் ஆப்கானில் நீடித்து வரும் நிலையில் , தாலிபான்கள், தற்போது,  ஆண்களும், பெண்களும் ஒரே நாளில் அங்குள்ள பொழுதுபோக்குப் பூங்காக்களுக்குச் செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளர்.

முதலில்,  வாரத்தில்,குறிப்பிட்ட  நாட்களில் மட்டும் ஆண்களும், ஆண்கள் செல்லாத நாட்களில் பெண்களுக்கும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில், தற்போது பெண்கள் பொழுது பூங்காக்களுக்குச் செல்லக்கூடாது என  உத்தரவிட்டுள்ளனர்.

இது ஆப்கானிஸ்தன் பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு ஐ நா  மற்றும் உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்கும் என தெரிகிறது.

Edited by Sinoj