1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (13:07 IST)

15 கிலோமீட்டர் 25 ஆயிரம் ரூபாய்.. விளம்பரத்திற்காக ரீல் விடும் இம்ரான் கான்..நிரூபணமான உண்மை

இம்ரான் கான் அரசின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும் என கூறிவிட்டு தனது வீட்டிற்கு தனிவிமானம் மூலம் சென்றுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமராக கடந்த 18 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
 
சமீபத்தில் பேசிய அவர் அரசின் செலவுகளை கட்டுப்படுத்த நான் பிரதமர் இல்லத்தில் தங்கப் போவதில்லை. அதற்கு பதிலாக இஸ்லாமாபாத்தில் ராணுவ செயலாளர் வீட்டில் தங்க இருக்கிறேன் என்றும் பிரதமர் அலுவலகத்தில் உள்ள 33 புல்லட் புரூப் கார்கள் அனைத்தும் ஏலம் விடப்படும். அந்த பணம் மக்களின் சேவைக்காக பயன்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.
 
பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் சிறப்பு விமானம் பயன்படுத்த மாட்டோம் என இம்ரான் கான் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
இந்நிலையில் இவரும் மற்றவர்களைப் போல விளம்பரம் தேடத் தான் இவ்வாறு செய்கிறார் என நிரூபித்துக் காட்டியுள்ளார். அலுவலகத்திருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது வீட்டிற்கு  இம்ரான்கான் தனி விமானத்தில் சென்றுள்ளார். 15 கிலோமீட்டர் செல்ல கிட்டதட்ட 25 ஆயிரம் ரூபாய் செலவாகுமாம். 
 
அரசின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும் என கூறிவிட்டு இம்ரான்கான் இப்படி செய்வதை எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.