கருணாநிதி நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்கிறாரா? : பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Last Modified திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (16:01 IST)
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நிகழ்ச்சியில் தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கமாட்டார் என பாஜக தலைமை அறிவித்துள்ளது.

 
வருகிற 30ஆம் தேதி சென்னையில் நடைபெறும் தெற்கே உதித்தெழுந்த சூரியன்' என்ற தலைப்பில் கருணாநிதிக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிக்கு பாஜக தலைவர் அமித் ஷா அழைக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்து ஏற்கனவே வெளியானது. இந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழில் அமித்ஷா பெயர் உள்ளதால் அவர் நிச்சயம் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. திமுக நடத்தும் நிகழ்ச்சியில் அமித்ஷா ஏன் பங்கேற்க வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பினர். அதேபோல், பாஜகவுடன், திமுக கூட்டணி அமைக்கப்போகிறது எனவும் ஏராளமானோர் கருத்து தெரிவித்திருந்தனர். அதேநேரம் அமித்ஷா இந்த விழாவில் கலந்து கொள்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகமல் இருந்தது.
 
இந்நிலையில், கருணாநிதி நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்க மாட்டார் என பாஜக தற்போது அறிவித்துள்ளது. 
 
இதன் மூலம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் எதிரொலித்த சர்ச்சை மற்றும் விமர்சனங்கள் முடிவுக்கு வந்துள்ளது. அதே சமயம்,
 
1. குலாம் நபி ஆசாத் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்
2. தேவகவுடா முன்னாள் இந்திய பிரதமர்
3. சரத்பவார், தேசியவாத காங்கிரஸ் தலைவர்
4. சந்திரபாபு நாயுடு, ஆந்திர முதலமைச்சர்
5. நிதிஷ்குமார், பிஹார் முதலமைச்சர்
6. அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதலமைச்சர்
7. பரூக் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்
8. நாராயணசாமி புதுச்சேரி மாநில முதலமைச்சர்
 
ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவது உறுதியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :