வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Updated : ஞாயிறு, 3 செப்டம்பர் 2017 (12:57 IST)

செவ்வாய் கிரகத்தில் வசித்தால் நோய் எதிர்ப்பு சக்திகள் குறையும் - எச்சரிக்கும் விஞ்ஞானி

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் அவனின் உடலில் உள்ள நோய்  எதிர்ப்பு சக்திகள் குறையும் என ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார்.


 

 
பூமிக்கு அடுத்து மனிதன் வாழக்கூடிய கிரகங்கள் ஏதேனும் இருக்கிறதா என விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்த போது, மனிதன் வாழ்வதற்கான சாத்தியங்கள் அனைத்தும் செவ்வாய் கிரகத்தில் இருக்கிறது என கண்டுபிடித்தனர். எனவே, செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்கு பலர் தயாராக இருக்கின்றனர். 
 
இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் இருந்தால் மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல நோய்கள் ஏற்படும் என ரஷ்யா மாஸ்கோவை சேர்ந்த இயற்பியல் தொழில்நுட்ப கல்வி மையத்தின் பேராசிரியர் எவ்ஜினி நிகாலோங் கருத்து தெரிவித்துள்ளார்.
 
பூமியில் உள்ள ஈர்ப்பு விசைக்கு ஏற்ப மனிதனின் உடல் அமைப்புகள் செயல்படுகின்றன. அதற்கேற்றார் போல் மனிதனின் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளும் உண்டாகின்றன. ஆனால், செவ்வாய் கிரகத்தில் ஈர்ப்பு சக்தி வேறு மாதிரி இருக்கும். அதனால் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாக குறைந்துவிடும். இதனால் பல நோய்கள் ஏற்படும். எனவே, செவ்வாய் கிரகத்தில் மனிதன் வசிப்பது கடினம்” என அவர் எச்சரித்துள்ளார்.
 
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வசிக்கலாம் என்ற நம்பிக்கைகளை விஞ்ஞானிகள் ஏற்படுத்தியுள்ள நிலையில், இவரின் எந்த எச்சரிக்கை திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.