மனித கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் கென்யா


Abimukatheesh| Last Modified செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (17:06 IST)
கென்யா நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று மனித கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரித்து வீடுகளில் சமையல் செய்ய ஊக்குவித்து வருகிறது.

 


 
மனித கழிவுகளிலிருந்து எரிபொருள், மின்சாரம் போன்றவை தயாரித்து பயன்படுத்தலாம் என பல ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வந்தனர். முதன்முதலாக அமெரிக்காவின் வடக்கு பகுதியைச் சேர்ந்த கொலராடோ மாகாணத்தில் உள்ள ஒரு நகரில் மனித கழிவுகளை எரிபொருளாக மாற்றி வானகங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். 
 
அதைத்தொடர்ந்து தற்போது கென்யா நகுருவின் நீர் மற்றும் சுகாதார சேவைகள் நிறுவனம் மனிதக் கழிவுகளை சேகரித்து எரிபொருளாக மற்றி விற்பனை செய்கிறது. மனித கழிவுகளை பயன்படுத்தி எரிபொருள் உருண்டைகளாக மாற்றி வீடுகளுக்கு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 
 
முதலில் மறுப்பு தெரிவித்த மக்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து அந்த ஊர்மக்கள், எரிபொருள் உருண்டையில் நாற்றமில்லை, சமையலுக்கு நன்கு உதவுகிறது, நன்றாக நீண்ட நேரம் எரிகிறது என தெரிவித்துள்ளனர். 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :