ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (12:29 IST)

நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் எவ்வளவு : அதிர்ச்சி ரிப்போர்ட்

உலக நாடுகளின் மொத்த கடன் தொகையானது யாரும் நினைத்துக்கூட பரர்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்அப்)கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலக நாடுகளின் கடன் அளவுகளை ஐஎம்எப் அமைப்பு கணக்கிட்டு வருகிறது. இவ்வாண்டு ஆரம்பத்தில் 182 லட்சம் கோடியாக இருந்த உலக கடன் தற்போது 184 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளதாக இதன் புள்ளி  விவரங்கள் தெரிவிக்கின்றன.
 
இதில் அதிக பெரும் கடன் வாங்கி இருப்பவை அமெரிக்கா. ஜப்பான் , சீனா ஆகிய மூன்று நாடுகள்தான். 
 
சுமார் 10 வருடங்களூக்கு முன்பு அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தான் பல வல்லரசு நாடுகள் கூட அதிகளவு கடன் வாங்கியுள்ளதாக ஐ.எம்.எப்.தெரிவித்துள்ளது.
 
மேலும் உலகின் வசிக்கும் ஒவ்வொரு மனிதன் மீதும் ரூ. 60 லட்சம் அளவுக்கு கடன்சுமை உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.