நடிகர்- நடிகைகள் என்றால் இளக்காரமா? பொங்கி எழுந்த பிரீத்தி ஜிந்தா!
நடிகை பிரீத்தி ஜிந்தா மக்கள் மோசமானதை தான் உடனே நம்புவதாக பொங்கி எழுகிறார்.
திருமணத்துக்குப் பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த அவர் தற்போது 'இஸ்க் இன் பாரீஸ்' என்ற படத்தின் தயாரிப்பாளராக மீண்டும் பாலிவுட்டுக்கு திரும்பி வந்திருக்கிறார். 'மீடூ ' விவகாரம் தொடர்பாக தனது கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக வருந்தும் பிரீத்தி ஜிந்தா அது தொடர்பாக மனம் திறந்து பேசினார்.
"இப்போது எல்லாருக்குமே நடிகர் நடிகைகள் என்றால் ஒருதொக்கு எண்ணி தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்கள்.
நாம் கடந்த காலத்தில் எவ்வளவு நல்லவராக நடந்திருந்தாலும் , நம்மை பற்றி வெளிவரும் பரபரப்பான ஒரு புதிய செய்தியைக் கொண்டு தான் நம்மை மதிப்பிடுகிறார்கள். அதிலும் மோசமான தவறுகளை உடனே நம்பி விடுகிறார்கள். நாம் பல நல்ல விஷயங்களை செய்து இருக்கிறோம். ஆனால் ஒரே ஒரு சிறிய தவறு செய்தால் போச்சு. உடனே அதை வைத்து இவர் இப்படித்தான் என்று தீர்மானித்து விடுவார்கள். வாழ்க்கையில் நாம் நம்மைப் பற்றி கூறப்படும் நல்லது கெட்டது மோசமானது என எல்லாவற்றையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும். சினிமாவில் நுழைந்தபோது பெரிய நடிகையாவேன் , நட்சத்திரம் ஆவேன், என்றெல்லாம் நான் எண்ணியதில்லை. சினிமாவில் நுழைந்த போது இந்த வேலை எனக்கு பிடிக்கும் என்று நினைத்து நடித்தேன் . இன்றுவரை அது எனக்கு பிடித்து இருக்கிறது. திறமை நமக்கு குறைவாக இருந்தால் கூட கடின உழைப்பால் அதை ஈடுகட்ட முடியும் முடியும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு தனது பேட்டியில் கூறினார்.