அமெரிக்காவை புரட்டி போட்ட ஹார்வி புயல்
மெக்சிகோ வளைகுடாவில் உருவான ஹார்வி புயல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தென் கிழக்கு பகுதியில் மெக்சிகோ வளைகுடாவில் உருவான புயலுக்கு ஹார்வி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக 130 மைல் வேகத்தில் காற்று வீசியது. லட்சக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு வாகனங்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
ஹார்வி புயல் கரையை கடந்தாலும் சூறாவளிக் காற்று குறையாமல் வீசியது. இதில் டெக்சாஸ் மாகாணத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. ஒரே நாளில் டெக்சாஸ் மாகாணத்தை நிலைகுலைய வைத்தது இந்த ஹார்வி புயல். மேலும் ஹார்வி புயல் பல்வேறு மேசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.