கூகுள் நிறுவனம் மூடல் ! கொரோனா வைரஸ் பீதி எதிரொலி !
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் இயங்கி வந்த கூகுள் நிறுவனம் மூடப்பட்டுள்ளது.
சீனாவின் வுகான் பகுதியிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் 3000க்கும் மேற்பட்ட மக்களை தாக்கியுள்ள நிலையில் நேற்று பலி எண்ணிக்கை வரை 106 ஆக உயர்வடைந்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. வைரஸ் தாக்கியதில் 500க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் சீனாவில் மக்கள் அனைவரும் முகமூடி அணிந்து பாதுகாப்பாக வெளியே வந்து செல்கின்றனர். புத்தாண்டுக்காக விடப்பட்ட விடுமுறைகளை அடுத்து பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் இன்னும் திறக்கப்படவில்லை.
இதையடுத்து சீனாவில் உள்ள தங்கள் அலுவலகங்கள் அனைத்தையும் கூகுள் நிறுவனம் தற்காலிகமாக மூடியுள்ளது. இதனால் அங்கு தகவல் தொடர்பு பாதிக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.